செய்திகள்
ஓசூர் ரெயில் மறியல் செய்ய வந்த திமுகவினரை படத்தில் காணலாம்.

ஓசூரில் ரெயில் மறியல் முயற்சி: தி.மு.க. எம்.எல்.ஏக்கள் உள்பட 120 பேர் கைது

Published On 2016-09-16 10:28 IST   |   Update On 2016-09-16 10:28:00 IST
ஓசூரில் ரெயில் மறியல் செய்ய முயன்ற தி.மு.க. எம்.எல்.ஏக்கள் உள்பட 120 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஓசூர்:

கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று காலை தி.மு.க. சார்பில் ஓசூர் ரெயில் நிலையத்தில் மறியல் செய்ய தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்றனர்.

அவர்களை ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரோகித்நாதன் தலைமையில் போலீசார் மறித்து கைது செய்தனர்.

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ்(தளி), முருகன்(வேப்பனப்பள்ளி) மற்றும் ஓசூர் நகர தி.மு.க. செயலாளர் மாதேஸ்வரன், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாறன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சத்யா உள்பட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஓசூர் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் செய்ய முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி செயலாளர் செந்தமிழ் தலைமையில் 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல் ரெயில் நிலையத்தில் இன்று காலை 7 மணியளவில் விடுதலை களம் சார்பில் அதன் நிர்வாகிகள் ரெயிலை மறிக்க முயன்றனர்.அப்போது, அவர்கள் கர்நாடக அரசை கண்டித்து பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினார்கள். உடனே போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இந்த சம்பவத்தால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News