செய்திகள்
புரசைவாக்கத்தில் நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தி விட்டு சிங்கப்பூருக்கு தப்ப முயன்ற என்ஜினீயர் கைது
புரசைவாக்கத்தில் நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தி விட்டு சிங்கப்பூருக்கு தப்ப முயன்ற என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்:
மடிப்பாக்கம் தேவி நகரை சேர்ந்தவர் திலிப்குமார் (28) சிவில் என்ஜினீயரான இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். திருவல்லிக்கேணியை சேர்ந்த டாக்டர் ஒருவரின் மகளுக்கும், திலீப் குமாருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண பத்திரிகை அடிக்கப்பட்டு உற்றார் உறவினர்களுக்கு வழங்கப்பட்டது.
கடந்த 4-ந்தேதி புரசைவாக்கத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் வைத்து திருமணம் நடைபெறுவதாக இருந்தது. அனைத்து ஏற்பாடுகளும் முடிந்த நிலையில், திடீரென மாப்பிள்ளை திலிப்குமார், திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்று கூறினார்.
ஏற்கனவே வழங்கப்பட்ட வரதட்சணையை விட கூடுதலாக பணம், நகை மற்றும் பொருட்கள் வேண்டும் என்றும் மணமகன் திலிப்குமார் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது பற்றி பெண்ணின் தந்தை நாராயணன் பரங்கிமலை துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்.
இந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. மடிப்பாக்கம் உதவி கமிஷனர் கோவிந்தராஜ், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டாரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மணமகன் திலிப்குமாருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனை தொடர்ந்து திலிப்குமார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
திருமணத்தை நிறுத்தி விட்டு தான் பணிபுரியும் சிங்கப்பூருக்கு தப்பிச் செல்ல திலிப்குமார், திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது. அதற்குள் போலீசில் சிக்கிக்கொண்டார்.