செய்திகள்
கடல்நீரை குடிநீராக்கும் திட்ட தொழில்நுட்பத்தை இஸ்ரேலில் இருந்து பெற்று தருகிறேன்: சுப்பிரமணியசாமி பேட்டி
கடல்நீரை குடிநீராக்கும் திட்ட தொழில்நுட்பத்தை இஸ்ரேலில் இருந்து பெற்று தருகிறேன் என்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு சுப்பிரமணியசாமி அளித்த பேட்டியின் போது கூறினார்.
ஆலந்தூர்:
பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் தேவைப்படுகிறது. இதற்கு கடல்நீரை குடிநீராக்கி தீர்த்துக்கொள்ள வேண்டும். இந்த தொழில்நுட்பம் பல நாடுகளில் உள்ளது.
கடல்நீர் குடிநீராக்கும் திட்ட தொழில்நுட்பத்தை இஸ்ரேலில் இருந்து தமிழக முதல்-அமைச்சருக்கு நான் வாங்கி தருகிறேன்.
விவசாயிகள் நலனுக்காக கிசான் யாத்திரை செல்லும் ராகுல்காந்திக்கு விவசாயிகள் பற்றி எதுவும் தெரியாது. காஷ்மீரில் அனைத்து கட்சி தலைவர்களை சந்திக்க மறுத்த ஹூரியத் தலைவர்கள் அனைவரும் தேச விரோதிகள். அவர்களை சிறையில் அடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.