செய்திகள்

மயிலாடுதுறையில் கல்லூரி மாணவி மர்ம மரணம்

Published On 2016-09-04 12:33 IST   |   Update On 2016-09-04 12:33:00 IST
மயிலாடுதுறையில் கல்லூரி மாணவி கோவில் குளத்தில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.

மயிலாடுதுறை:

திருவாரூர் மாவட்டம் பேரளம் காரைக்கால் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் ஜெயமாலா (22). இவர் மயிலாடுதுறை அரசு பெண்கள் கல்லூரியில் வரலாற்றுத் துறை 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்ற அவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர், மற்றும் உறவினர்கள் அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் குளக்கரையில் ஜெயமாலா இறந்து கிடந்தார். இது குறித்து மயிலாடுதுறை போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மாணவியின் உறவினர்கள் திரண்டனர். அவர்கள் ஜெயமாலா சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிவித்தனர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வ ருகிறார்கள்.

Similar News