செய்திகள்

தஞ்சை பெரிய கோவிலில் ரூ. 9.34 லட்சம் உண்டியல் காணிக்கை

Published On 2016-09-01 18:00 IST   |   Update On 2016-09-01 18:00:00 IST
தஞ்சை பெரிய கோவிலில் ரூ. 9.34 லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்தது.
தஞ்சாவூர்:

தஞ்சை பெரிய கோவிலில் மொத்தம் 11 உண்டியல்கள் உள்ளன. இவைகள் ஒரு மாதத்திற்கு பிறகு திறந்து எண்ணப்பட்டன.

அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர்கள் பரணிதரன், உமாதேவி, செயல் அலுவலர் மாதவன் உள்ளிட்டோர் முன்னிலையில் உண்டியல் எண்ணப்பட்டது.

இதில் பக்தர்கள் 9 லட்சத்து 34 ஆயிரத்து 485 ரூபாய் ரொக்கமாகவும், 90 கிராம் தங்க நகைகள், 100 வெளிநாட்டு நோட்டுக்களை காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

Similar News