செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு தங்க கிரீடம்-ஒட்டியாணம் காணிக்கை: சென்னை பக்தர் வழங்கினார்

Published On 2016-08-23 12:03 IST   |   Update On 2016-08-23 12:03:00 IST
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு தங்க கிரீடம், ஒட்டியாணம் காணிக்கையாக சென்னை பக்தர் வழங்கினார்.
சிதம்பரம்:

சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். சென்னையைச் சேர்ந்த பக்தர் இங்குள்ள நடராஜருக்கு 550 கிராம் எடையுள்ள தங்க கிரீடம் மற்றும் சிவகாமசுந்தரிக்கு 280 கிராம் எடையுள்ள ஒட்டியாணம் ஆகியவற்றை காணிக்கையாக வழங்கினார்.

தங்க கிரீடம், ஒட்டியாணத்தில் நவரத்தின கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.25 லட்சமாகும்.

கோவில் தீட்சிதர்கள் முன்னிலையில் தங்க கிரீடம், ஒட்டியாணம் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து சாமிக்கும், அம்மனுக்கும் கிரீடம், ஒட்டியாணம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

Similar News