செய்திகள்
மோட்டார் சைக்கிள் மோதி நேபாள வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள் மோதி நேபாள வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
நேபாளத்தை சேர்ந்தவர் பதூர் பகதூர் (வயது 25). இவர் செம்பாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் காவலாளி உள்பட பல்வேறு வேலைகளை பார்த்து வந்தார். பதூர் பகதூர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பரை பார்ப்பதற்காக செம்பாக்கம் பகுதிக்கு சென்றார். வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள ராஜகீழ்ப்பாக்கத்தில் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் திடீரென பதூர் பகதூர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் பதூர் பகதூர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்திய மர்மநபரை தேடி வருகின்றனர்.