செய்திகள்
ஜெயங்கொண்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மாயாவதியை ஆபாசமாக விமர்சனம் செய்த தயாசங்கர்சிங் என்பவரை கண்டித்து ஜெயங்கொண்டம் காந்திபூங்கா அருகில் பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஜெயங்கொண்டம்:
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை ஆபாசமாக விமர்சனம் செய்த உத்திரபிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் தயாசங்கர்சிங் என்பவரை கண்டித்து ஜெயங்கொண்டம் காந்திபூங்கா அருகில் பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் வக்கீல் ஞானசேகரன் தலைமைவகித்தார். சட்டமன்ற தொகுதி தலைவர் குரு முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தை மாணவரணி அமைப்பாளர் பாரத் துவக்கி வைத்தார். முன்னாள் மாவட்ட தலைவர் நீலமேகம், நிர்வாகிகள் அஜித், பாண்டியன், பகுஜன்பாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் இளைஞரணி அமைப்பாளர் தீன தயாளன் நன்றி கூறினார்.