செய்திகள்

தமிழ்நாட்டில் பாதுகாப்புக்கு பெண்கள் ஆயுதம் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்: அர்ஜூன் சம்பத் பேட்டி

Published On 2016-07-08 10:31 IST   |   Update On 2016-07-08 10:31:00 IST
திட்டக்குடியில் தமிழ்நாட்டில் பெண்கள் தங்களது பாதுகாப்புக்காக ஆயுதங்கள் வைத்துக் கொள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் பேசினார்.
பெண்ணாடம்:

திட்டக்குடியில் இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன்சம்பத், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆடி மாதத்தில் இந்து கோவில்களில் கொண்டாடும் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சிக்கு அரசு உரிய அரிசி வழங்க வேண்டும். ராமானுஜரின் ஆயிரமாவது விழாவை மத்திய, மாநில அரசுகள் தேசிய விழாவாக கொண்டாட வேண்டும்.

இந்து மக்கள் கட்சி சார்பில் 1 லட்சம் பேர் தாய் மதத்திற்கு திரும்பும் முயற்சியை எடுத்துள்ளோம். வருகிற ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திர தினவிழாவின் போது, கச்சத்தீவில் நமது உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் அரசே அங்கு தேசிய கொடியை ஏற்ற வேண்டும். மேலும் அங்கு ஒரு விநாயகர் கோவிலையும் கட்டித்தர வேண்டும்.

கடலூர், திருப்பூர் பகுதிகளில் ஐ.எஸ். அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவருகிறது. இதை அரசு கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பெண்கள் தங்களது பாதுகாப்புக்காக ஆயுதங்கள் வைத்துக் கொள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும். அவர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.

ஆந்திர அரசு பாலாற்றில் அணை கட்டுவதையும், வாணியம்பாடி அருகே கனகநாச்சியார் கோவில் நிர்வாகத்தை ஆந்திர அரசு அத்துமீறி எடுத்துக்கொண்டதையும் கண்டித்து வருகிற 12-ந்தேதி பாலாறு அணை அருகே இந்துமக்கள் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News