செய்திகள்

மறியல் மற்றும் கல்வீச்சு தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 60 பேர் கைது

Published On 2016-05-24 09:16 IST   |   Update On 2016-05-24 09:16:00 IST
மறியல் மற்றும் கல்வீச்சு தொடர்பாக 480 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதகுபட்டி:

பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் போலீசார் 10 பேரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதனை கண்டித்து அந்த சமுதாயத்தினர் போலீஸ் நிலையம் முற்றுகை, சாலை மறியல், கல்வீச்சு போன்றவற்றில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர். இது குறித்து மதகுபட்டி போலீசார் விசாரணை நடத்தி 480 பேர் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், மதகுபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகரன் உள்பட 60 பேரை கைது செய்தனர். மேலும் பலரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் காரணமாக மதகுபட்டி பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Similar News