செய்திகள்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் குளத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்ட அணு சக்தி துறைக்கு தடை: ஐகோர்ட்டு உத்தரவு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் குளத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்ட அணு சக்தி துறைக்கு தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
காஞ்சீபுரம் மாவட்டம், கல்பாக்கத்தை அடுத்துள்ள நெய்குப்பி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி. இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘எங்கள் கிராமத்தில் 3.20 ஏக்கரில் குளம் உள்ளது. இதற்கு அருகே கல்பாக்கம் அணுசக்தித் துறை சார்பில் 16 அடுக்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இந்த கட்டிடத்துக்கு, நெய்குப்பி கிராம பஞ்சாயத்து இதுவரை தடையில்லா சான்றிதழ் வழங்கவில்லை. இந்த நிலையில், 3.20 ஏக்கரில் அமைந்துள்ள குளத்தை ஆக்கிரமித்து அதற்கு அருகே மற்றொரு 16 அடுக்கு கட்டிடத்தை கட்டுவதற்கு அணுசக்தித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
எனவே, எங்கள் ஊர் குளத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்ட தடை விதிக்கவேண்டும். இந்த நீர்நிலையை பாதுகாக்க காஞ்சீபுரம் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.வி.முரளிதரன் ஆகியோர் விசாரித்து, ‘நீர்நிலையை அணுசக்தித் துறை அதிகாரிகள் ஆக்கிரமிக்கப்போவதாக மனுதாரர் கூறியுள்ளார். எனவே, தற்போதைய நிலையே அங்கு தொடர வேண்டும்’ என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூலை இரண்டாவது வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.
தற்போதைய நிலை தொடர வேண்டும் என்ற உத்தரவினால், சர்ச்சைக்குரிய நிலத்தில் கட்டிடம் பணி மேற்கொள்ள தடை ஏற்பட்டுள்ளது.