தமிழ்நாடு செய்திகள்

குளச்சலில் 2 சிறுவர்கள் மாயம்

Published On 2023-11-05 12:26 IST   |   Update On 2023-11-05 12:26:00 IST
  • ராஜம் கோடி முனை திரும்பி குளச்சல் போலீசில் புகார் செய்தார்.
  • அண்ணன்-தம்பியான சிறுவர்கள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குளச்சல்:

மதுரை சொக்கலிங்கம் நகர் 5-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 45). மாற்றுத்திறனாளி. இவரது மனைவி ராஜம் (42). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2021-ல் இந்த தம்பதியினர் குடும்பத்துடன் குமரி மாவட்டம் குளச்சல் அருகே கோடிமுனை வந்து அங்கு வசித்து வருகின்றனர்.

இதில் 16 வயது சிறுவன் தவிர மற்ற குழந்தைகள் பனவிளை சரல்விளையில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். 16 வயது சிறுவன் மதுரையில் 9-ம் வகுப்பு வரை படித்துள்ளான். கோடிமுனைக்கு வந்தப்பின் பள்ளிக்கு செல்லாமல் உள்ளான். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சிறுவர்களின் தாய் ராஜம் மதுரைக்கு சென்றார். இவரை 16 வயது மற்றும் 9 வயது சிறுவன் ஆகியோர் குளச்சல் பஸ் நிலையத்தில் பஸ் ஏற்றிவிட்டனர். பின்னர் சிறுவர்கள் வீட்டுக்கு திரும்பி செல்லவில்லை.

இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாத குழந்தைகள் குறித்து ராஜா, ராஜத்திற்கு தகவல் தெரிவித்தார். ராஜம் கோடி முனை திரும்பி குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுவர்களை தேடி வருகின்றனர். அண்ணன்-தம்பியான சிறுவர்கள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News