தமிழ்நாடு செய்திகள்

முறையான அனுமதி பெறாமல் இயங்கும் 162 தனியார் பள்ளிகள்

Published On 2023-02-09 09:04 IST   |   Update On 2023-02-09 09:04:00 IST
  • தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை தவிர, 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுயநிதி பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
  • சில தனியார் பள்ளிகள் ஒரு பள்ளிக்கு அனுமதி வாங்கி, கிளை பள்ளிகளை திறந்து, அதில் மாணவர் சேர்க்கை மேற்கொண்டு வருவதாக புகார் வந்துள்ளது.

சென்னை:

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை தவிர, 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுயநிதி பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த சுயநிதி பள்ளிகள் (மெட்ரிகுலேசன், சி.பி.எஸ்.இ., சர்வதேச, பன்னாட்டு பள்ளிகள்) மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககத்தின் தடையின்மை சான்று போன்ற உரிய அனுமதி பெறுவது அவசியமான ஒன்று.

இந்த நிலையில், சில தனியார் பள்ளிகள் ஒரு பள்ளிக்கு அனுமதி வாங்கி, அதனை கொண்டு கிளை பள்ளிகளை திறந்து, அதில் மாணவர் சேர்க்கை மேற்கொண்டு வருவதாக மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககத்துக்கு புகார் வந்ததாக கூறப்படுகிறது.

அந்த புகாரின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த ஆய்வில் தமிழ்நாட்டில் 162 தனியார் பள்ளிகள் முறையான அனுமதி பெறாமல் செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த பள்ளிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு இருப்பதாகவும், விரைவில் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய விளக்கம் பெற இருப்பதாகவும் கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த பள்ளிகள் மீது மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News