10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது: காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் 1 லட்சம் பேர் தேர்வு எழுதினர்
- செங்கல்பட்டு மாவட்டத்தில் 18 ஆயிரத்து 112 மாணவர்கள், 19 ஆயிரத்து 238 மாணவிகள் என மொத்தம் 37 ஆயிரத்து 350 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.
- புழல் ஜெயிலில் 46 கைதிகள் இன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8,445 மாணவர்கள், 7989 மாணவிகள் என மொத்தம் 16 ஆயிரத்து 434 பேர் தேர்வு எழுதினர்.
பொதுத்தேர்விற்கு 5 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கு, 5 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 5 கூடுதல் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 63 தேர்வு மையங்களுக்கு 63 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 63 துறை அலுவலர்களும், 11 வழித்தட அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 177 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.
25 ஆயிரத்து 531 மாணவர்களும் 24 ஆயிரத்து 682 மாணவிகளும் என மொத்தம் 50 ஆயிரத்து 213 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர்.
மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மேலும், தேர்வு மையங்களில் செல்போன் மற்றும் டிஜிட்டல் வாட்ச் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டு மாணவ-மாணவிகள் தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 18 ஆயிரத்து 112 மாணவர்கள், 19 ஆயிரத்து 238 மாணவிகள் என மொத்தம் 37 ஆயிரத்து 350 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.
இதற்காக 119 தேர்வு மையம், 7 தனித்தேர்வு மையம் என மொத்தம் 126 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. மாவட்டத்தில் தேர்வை கண்காணிக்க 225 பறக்கும்படையினர் 1950 அறைக்கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
புழல் ஜெயிலில் 46 கைதிகள் இன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். சிறை ஒன்றில் 32 பேரும், சிறை எண்-2ல் 10 பேர், பெண்கள் சிறையில் 4 பேர் தேர்வு எழுதினார்கள்.