தமிழ்நாடு

திண்டுக்கல் சிறையில் இருந்து 10 கைதிகள் மதுரைக்கு மாற்றம்

Published On 2023-11-08 07:03 GMT   |   Update On 2023-11-08 07:03 GMT
  • அறையை யார் சுத்தம் செய்வது என்பதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
  • வீரபாபு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் தாலுகா அலுவலக சாலையில் கிளை சிறைச்சாலை உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வடமதுரை திடீர்நகரை சேர்ந்த வீரபாபு (வயது 25) என்பவர் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவருடன் மதுரையை சேர்ந்த செல்வக்குமார் (25) என்ற கைதியும் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அறையை யார் சுத்தம் செய்வது என்பதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சாப்பாட்டு தட்டால் வீரபாபு தலையில் செல்வக்குமார் பயங்கரமாக தாக்கினார். இதனையடுத்து வீரபாபு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து நகர் மேற்கு போலீசார் செல்வக்குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் சிறையில் இதுபோன்ற மோதல் சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க செல்வக்குமார் உள்ளிட்ட 10 கைதிகளை மதுரை மத்திய சிறைக்கு மாற்றினர்.

Tags:    

Similar News