விளையாட்டு
உலக வில்வித்தை போட்டி: பதக்கத்தை தவறவிட்ட இந்திய மகளிர் அணி
- ரீகா்வ் மகளிா் அணிகள் பிரிவில் இந்தியா அரை இறுதியில் தோற்றது.
- ரீகா்வ் கலப்பு அணிகள் பிரிவில் தீபிகா குமாரி, நீரஜ் சவுகான் ஆகியோர் 1,347 புள்ளிகளுடன் 7-வது இடம் பிடித்தது.
தென் கொரியாவில் நடைபெற்று வரும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில், ரீகா்வ் மகளிா் அணிகள் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டது.
தீபிகா குமாரி, அங்கிதா பகத், கதா கடாகே ஆகியோா் அடங்கிய அணி அரை இறுதியில் தோற்று வெண்கலப் பதக்கத்துக்கு விளையாடியது. அதில் 5-3 என்ற கணக்கில் தென் கொரியாவிடம் தோல்வியைத் தழுவியது.
ரீகா்வ் கலப்பு அணிகள் பிரிவில் தீபிகா குமாரி, நீரஜ் சவுகான் ஆகியோர் 1,347 புள்ளிகளுடன் 7-வது இடம் பிடித்தது.