விளையாட்டு
null
லியாண்டர் பயஸ் தந்தையும், முன்னாள் ஹாக்கி வீரருமான வெஸ் பயஸ் காலமானார்
- 1972ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.
- பல்வேறு அணிகளுக்கு மெடிக்கல் ஆலோசகராகவும் இருந்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரராக திகழ்ந்தவர் லியாண்டர் பயஸ். இவரது தந்தை வெஸ் பயஸ். முன்னாள் ஹாக்கி வீரரான இவர், இன்று காலமானார். இவருக்கு 80 வயது.
வெஸ் பயஸ் 1972ஆம் ஆண்டு முனிச் ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம் பிடித்திருந்தார்.
பார்கின்சன் நோய் முற்றிய நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
இந்திய ஹாக்கி அணியில் மிட்பீல்டர் வீரராக விளையாடி வந்தவர். மேலும் கால்பந்து, கிரிக்கெட், ரக்ஃபி போன்றவற்றில் விளையாடியுள்ளார். இந்திய ரக்ஃபி கால்பந்து சங்கத்தின் தலைவராக 1996-ல் இருந்து 2002 வரை தலைவராக பணியாற்றினார்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில், பிசிசிஐ, இந்திய டேவிஸ் கோப்பை அணி மெடிக்கல் ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.