டென்னிஸ்
வாஷிங்டன் ஓபன் 2025: 45 வயதில் சாதனை படைத்த வீனஸ் வில்லியம்ஸ்
- வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் ஜூலை 21 முதல் 27 வரை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடக்கிறது.
- இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் பெய்டன் மெக்கென்சி மோதினார்.
வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் ஜூலை 21 முதல் 27 வரை அமெரிக்காவின் வாஷிங்டன், டி.சி.யில் உள்ள வில்லியம் எச்.ஜி. ஃபிட்ஸ்ஜெரால்ட் டென்னிஸ் மையத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் உலக நம்பர் 1 வீராங்கனையான வில்லியம்ஸ் (அமெரிக்கா) மற்றும் சக நாட்டவரான பெய்டன் மெக்கென்சி ஸ்டெர்ன்ஸ் (அமெரிக்கா) உடன் மோதினார்.
இதில் ஏழு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அசத்தினார். 45 வயதில் வெற்றி பெற்றதன் மூலம் 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு WTA ஒற்றையர் போட்டியில் வென்ற மிக வயதான வீராங்கனை என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.