டென்னிஸ்
US Open 2025 4ஆம் தரநிலை ஜோடியை வீழ்த்தி இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியது யுகி பாம்ப்ரி ஜோடி
- 14ஆம் தரவரிசையில் உள்ள பாம்ப்ரி ஜோடி, 4ஆம் தரவரிசையில் உள்ள ஜெர்மனி ஜோடியை வீழ்த்தியது.
- ஜெர்மனி ஜோடி கடந்த வருடம் 2ஆவது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஒபன் டென்னிஸ், நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் உடன் இணைந்து விளையாடி வருகிறார்.
14ஆம் தரநிலை ஜோடியான பாம்ப்ரி- வீனஸ், தரநிலையில் 4ஆம் நிலை ஜோடியான ஜெர்மனியின் டிம் புட்ஸ்- கெவின் கிராவிட்ஸ் ஜோடியை எதிர்கொண்டது.
இதில் பாம்ப்ரி ஜோடி 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. ஜெர்மனி ஜோடி கடந்த அமெரிக்க ஓபனில் 2ஆவது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
காலிறுதியில் நிகோலா மெக்டிக் (குரோசியா) - ராஜீ ராம் (அமெரிக்கா) ஜோடியை எதிர்கொள்கிறது.