டென்னிஸ்
விம்பிள்டன் டென்னிஸ்: ஆண்கள் இரட்டையரில் பிரிட்டன் ஜோடி சாம்பியன்
- விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் இறுதிப் போட்டியில் பிரிட்டன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் பிரிட்டனின் ஜூலியன் காஷ்-லாய்ட் கிளாஸ்பூல், ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகடா-நெதர்லாந்தின் டேவிட் பேய் ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய பிரிட்டன் ஜோடி 6-2, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.