டென்னிஸ்

வூஹான் ஓபன் டென்னிஸ்: சபலென்கா, கோகோ காப் அரையிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2025-10-11 04:04 IST   |   Update On 2025-10-11 04:04:00 IST
  • வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
  • இதில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் அரையிறுதிக்கு முன்னேறினார்.

பீஜிங்:

வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

இந்த தொடரில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் பெலாரசின் அரினா சபலென்கா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் 6-3, 6-0 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் லாரா செக்மண்டை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இன்று நடைபெறும் அரையிறுதியில் சபலென்கா பெகுலாவுடனும், கோகோ காப், பவுலினியுடனும் மோதுகின்றனர்.

Tags:    

Similar News