டென்னிசில் இருந்து திடீரென விலகிய துனீசிய வீராங்கனை
- கடந்த 2 ஆண்டாக நான் காயங்களை எதிர்த்துப் போராடுகிறேன்.
- என் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
துனீசிய வீராங்கனையான ஒன்ஸ் ஜபேர், சமீப காலமாக காயங்களால் அவதிப்பட்டு வருகிறார். இந்த ஆண்டு நடந்த மூன்று கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் ஜபேர் மூன்றாவது சுற்றைத் தாண்டவில்லை.
இந்நிலையில், 3 முறை கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியாளரான ஓன்ஸ் ஜபேர், மன நலனில் கவனம் செலுத்துவதற்காக டென்னிசில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஒன்ஸ் ஜபேர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
கடந்த 2 ஆண்டாக நான் என்னை மிகவும் கடினமாக உந்தித் தள்ளி வருகிறேன். காயங்களை எதிர்த்துப் போராடுகிறேன். பல சவால்களை எதிர்கொள்கிறேன். சிறிது காலமாக மைதானத்தில் நான் மகிழ்ச்சியாக உணரவில்லை. டென்னிஸ் மிகவும் அழகான விளையாட்டு. என்னைப் புரிந்துகொண்டதற்கு என் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவையும் அன்பையும் என்னுடன் சுமந்து செல்கிறேன் என பதிவிட்டுள்ளார்.