டென்னிஸ்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் மெத்வதேவ்

Published On 2025-10-10 22:03 IST   |   Update On 2025-10-10 22:03:00 IST
  • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
  • இதில் ரஷியாவின் மெத்வதேவ் காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.

பீஜிங்:

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் டி மினாரை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு காலிறுதியில் பிரான்ஸ் வீரர் ஆர்தர் ரிண்டர்நெக் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் கனடாவின் பெலிக்ஸ் ஆக்ரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெற உள்ள அரையிறுதியில் மெத்வதேவ், பிரான்ஸ் வீரர் ஆர்தர் ரிண்டர்நெக் உடன் மோதுகிறார்.

Tags:    

Similar News