டென்னிஸ்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: காயத்தால் நடப்பு சாம்பியன் திடீர் விலகல்

Published On 2025-10-06 04:44 IST   |   Update On 2025-10-06 04:44:00 IST
  • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
  • இதில் இத்தாலியின் ஜானிக் சின்னருக்கு 3வது சுற்றில் காயம் ஏற்பட்டது.

பீஜிங்:

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் 2 வீரருமான இத்தாலியின் ஜானிக் சின்னர், நெதர்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூர் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சின்னர் முதல் செட்டை 7-6 (7-3) என வென்றார். இதற்கு பதிலடியாக கிரீக்ஸ்பூர் 2வது செட்டை 7-5 என வென்றார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் கிரீக்ஸ்பூர் 3-2 என முன்னிலை பெற்றிருந்தார். அப்போது சின்னருக்கு காயம் ஏற்பட்டதால் போட்டியில் இருந்து விலகினார். இதனால் கிரீக்ஸ்பூ வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

நடப்பு சாம்பியனான சின்னர் காயத்தால் தொடரில் இருந்து வெளியேறினார்.

Tags:    

Similar News