டென்னிஸ்

இத்தாலி ஓபன் டென்னிஸ்: ஒலிம்பிக் சாம்பியனை போராடி வீழ்த்தி இறுதிக்கு முன்னேறிய கோகோ காப்

Published On 2025-05-16 05:27 IST   |   Update On 2025-05-16 05:27:00 IST
  • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
  • அரையிறுதி சுற்றில் அமெரிக்க வீராங்கனை வெற்றி பெற்றார்.

ரோம்:

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையரில் நேற்று இரவு நடந்த அரையிறுதியில் ஒலிம்பிக் சாம்பியனும், 8-ம் நிலை வீராங்கனையுமான சீனாவின் கின் வென் ஜாங், அமெரிக்காவின் கோகோ காப்பை எதிர்கொண்டார்.

இதில் கோகோ காப் முதல் செட்டை 7-6 (7-3) என போராடி வென்றார். இரண்டாவது செட்டை கின் வென் ஜாங் 6-4 என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை கோகோ காப் 7-6 (7-4) என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

இந்தப் போட்டி சுமார் 3 மணி நேரம் 39 நிமிடங்கள் நீடித்தது.

நாளை நடைபெறும் இறுதிபோட்டியில் கோகோ காப், இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினியை எதிர்கொள்கிறார்.

Tags:    

Similar News