டென்னிஸ்
ஹாங்காங் ஓபன் டென்னிஸ்: காயத்தால் காலிறுதியில் விலகினார் கலின்ஸ்கயா
- ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
- இதன் காலிறுதி சுற்றில் ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா காயத்தால் வெளியேறினார்.
ஹாங்காங்:
ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா, கனடா வீராங்கனை விக்டோரியா எம்போகா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய எம்போகா 6-1 என முதல் செட்டை வென்றார். அடுத்த செட்டில் 3-1 என முன்னிலை பெற்றிருந்தபோது கலின்ஸ்கயா காயத்தால் விலகினார். இதையடுத்து, எம்போகா அரையிறுது சுற்றுக்கு முன்னேறினார்.