விளையாட்டு
null

காமன்வெல்த் போட்டி: சிகரம் தொட்ட இந்திய வீரர்கள்

Published On 2022-08-09 05:52 GMT   |   Update On 2022-08-09 12:40 GMT
  • இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் உள்பட 61 பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளது.
  • பிவி சிந்து, சரத் கமல், அமித் பங்கால், நிகத் சரீன் உள்ளிட்டோர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.

பர்மிங்காம்:

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, தென் ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து, நியூசிலாந்து, வேல்ஸ், கென்யா, நைஜீரியா உள்பட 72 நாடுகளை சேர்ந்த 5054 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்தியா சார்பில் 106 வீரர்கள், 104 வீராங்கனைகள் என மொத்தம் 210 பேர் 16 விளையாட்டுகளில் கலந்து கொண்டனர். போட்டியின் நிறைவில் இந்தியா பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது. ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து , கனடா 2-வது, 3-வது இடங்களில் உள்ளன.

இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் உள்பட 61 பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளது. குறிப்பாக மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ரவி குமார் தயா, வினேஷ் போகத், நவீன் ஆகியோர் தங்கம் வென்றனர். இதேபோல் சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வரும் பிவி சிந்து, சரத் கமல், அமித் பங்கால், நிகத் சரீன் உள்ளிட்டோர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.

ஹர்மன்பிரீத்சிங் கவூர் தலைமையிலான மகளிர் கிரிக்கெட் அணி, ஆடவர் ஹாக்கி அணி உள்ளிட்டோர் வெள்ளி பதக்கத்தை வென்றது.

பதக்கப்பட்டியலில் இந்தியா 4-வது இடம் பதக்கம் வென்று தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ள இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News