விளையாட்டு
ஹாங்காங் ஓபன்: சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
- ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
ஹாங்காங்:
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, மலேசியாவின் யாப் ராய் கிங்-ஜுனைத் ஆரிப் ஜோடி உடன் மோதியது.
இதில் சாத்விக் சிராக் ஜோடி முதல் செட்டை 21-14 என கைப்பற்றியது. 2வது செட்டை தாய்லாந்து ஜோடி 22-20 என வென்றது. இதில் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 3வது செட்டை 21-16 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
இன்று நடைபெறும் அரையிறுதியில் சாத்விக்-சிராக் ஜோடி தைவானின் லின் பிங் வெய்-சென் செங் குவான் ஜோடியை சந்திக்கிறது.