விளையாட்டு

ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்... சாத்விக்-சிராக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்று சாதனை

Published On 2023-04-30 15:47 GMT   |   Update On 2023-04-30 15:47 GMT
  • 1965ம் ஆண்டு ஆடவர் ஒற்றையர் பிரிவில் தினேஷ் கன்னா தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
  • சாத்விக் மற்றும் சிராக் 2022ல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றனர்.

துபாய்:

துபாயில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரர்களான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

இன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிப்போட்டியில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி மலேசியாவின் ஓங் யியூ சின்-டியோ யி ஜோடியை 16-21, 21-17, 21-1 என்ற செட்கணக்கில் வீழ்த்தியது. இதன்மூலம் 58 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியர்கள் ஆசிய சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். இந்த சீசனில் சாத்விக்-சிராக் வென்றுள்ள இரண்டாவது சாம்பியன் பட்டம் இதுவாகும்.

இதற்கு முன்பு லக்னோவில் 1965ம் ஆண்டு நடந்த ஆசிய போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தினேஷ் கன்னா என்ற வீரர் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அதன்பின்னர் முதல் முறையாக இந்த ஆண்டு இந்திய வீரர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

ஆசிய சாம்பியன்ஷிப் பட்டம் தவிர, சாத்விக் மற்றும் சிராக் 2022ல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றனர். உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் உலக சுற்றுப்பயணத்தில் ஐந்து பட்டங்களை வென்றுள்ளனர்.

Tags:    

Similar News