விளையாட்டு
ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி
- ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் சீனாவின் நிங்போ நகரில் நடைபெற்று வருகிறது.
- இதில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
நிங்போ:
ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் சீனாவின் நிங்போ நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, இந்தோனேசியாவின் எஸ்தர் நுருமி வர்தயோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-15, 21-19 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 44 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.