விளையாட்டு

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி

Published On 2025-09-16 17:46 IST   |   Update On 2025-09-16 17:46:00 IST
  • இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் எளிதில் வெற்றி பெற்றார்.
  • இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் எளிதில் வெற்றி பெற்றார்.

பீஜிங்:

சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டி வரும் 21-ம் தேதி வரை நடக்கிறது.

இதில் இந்தியா சார்பில் லக்ஷயா சென், ஆயுஷ் ஷெட்டி, பி.வி.சிந்து, சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி உள்ளிட்டோர் களம் காணுகிறார்கள்.

இந்நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, டென்மார்க் வீராங்கனை ஜூலி டாவால் ஜாகோப்சென் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய பி.வி.சிந்து 21-4, 21-10 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

இந்தப் போட்டி 27 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

Tags:    

Similar News