விளையாட்டு

புரோ கபடி லீக்: டெல்லி அணியின் ஆதிக்கம் நீடிக்குமா? குஜராத்துடன் இன்று மோதல்

Published On 2025-09-11 12:38 IST   |   Update On 2025-09-11 12:38:00 IST
  • இந்த தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணி டெல்லியாகும்.
  • இன்றுடன் விசாகப்பட்டினத்தில் போட்டிகள் முடிகிறது.

விசாகப்பட்டினம்:

12-வது புரோ கபடி லீக் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் 45-37 என்ற புள்ளிக் கணக்கில் மும்பையை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றது. மும்பை அணிக்கு 2-வது தோல்வி ஏற்பட்டது.

மற்றொரு ஆட்டத்தில் புனே அணி 43-32 என்ற கணக்கில் உ.பி.யோத்தாசை தோற்கடித்தது. புனே 4 வெற்றியுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. உ.பி. அணிக்கு 2-வது தோல்வி ஏற்பட்டது.

இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட் டியில் மும்பை-பாட்னா அணிகள் மோதுகின்றன. மும்பை அணி 4-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. பாட்னா அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் தபாங் டெல்லி-குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணி டெல்லியாகும். அந்த அணி தான் மோதிய 4 ஆட்டத்திலும் வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. டெல்லி அணி பெங்களூருவை 41-34 என்ற கணக்கிலும், புனேவை கோல்டன் ரைடிலும், ஜெய்ப்பூரை 36-35 என்ற கணக்கிலும், பெங்களூருவை 45-34 என்ற கணக்கிலும் தோற்கடித்தது.குஜராத்தை வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

குஜராத் அணி 2-வது வெற்றி வேட்கையில் உள்ளது. அந்த அணி 1 வெற்றி, 3 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 11-வது இடத்தில் உள்ளது.

இன்றுடன் விசாகப்பட்டினத்தில் போட்டிகள் முடிகிறது. நாளை முதல் 2-வது கட்ட போட்டிகள் ஜெய்ப்பூரில் தொடங்குகிறது.

Tags:    

Similar News