விளையாட்டு

உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற தமிழக வீரர் - பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2025-09-16 09:27 IST   |   Update On 2025-09-16 09:27:00 IST
  • 22 வயதான ஆனந்த்குமார், சீனியர் ஆண்கள் பிரிவில் 1000 மீட்டர் பிரிவில் விளையாடினார்.
  • இதே சாம்பியன்ஷிப்பில் 500 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

சீனாவில் நடைபெற்ற ஸ்பீடு ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த இந்திய இளம் வீரர் ஆனந்த்குமார் வேல்குமார் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.

22 வயதான ஆனந்த்குமார், சீனியர் ஆண்கள் பிரிவில் 1000 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் 1:24.924 விநாடிகளில் இலக்கை அடைந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

இதன் மூலம், ஸ்பீடு ஸ்கேட்டிங் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இதற்கு ஒரு நாள் முன்னதாக அவர், இதே சாம்பியன்ஷிப்பில் 500 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஸ்பீடு ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், தங்கப் பதக்கம் வென்ற தமிழகவீரர் ஆனந்த்குமார் வேல்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், "2025 ஆம் ஆண்டு ஸ்பீடு ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப்பில் சீனியர் ஆண்கள் 1000 மீட்டர் ஸ்பிரிண்டில் தங்கம் வென்றதற்காக ஆனந்த்குமார் வேல்குமாரை நினைத்து பெருமைப்படுகிறேன். அவரது மன உறுதி, வேகம் மற்றும் உற்சாகம் அவரை ஸ்கேட்டிங்கில் இந்தியாவின் முதல் உலக சாம்பியனாக்கியுள்ளது. அவரது சாதனை எண்ணற்ற இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும். அவருக்கும் அவரது அனைத்து எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News