விளையாட்டு

பும்ராவால் ஈட்டி எறிதல் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்த முடியும்: நீரஜ் சோப்ரா

Published On 2025-06-28 15:20 IST   |   Update On 2025-06-28 15:20:00 IST
  • இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்று நீர்ஜ் சோப்ரா சாதனைப் படைத்துள்ளார்.
  • இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஈட்டி எறிதலில் யார் ஆதிக்கம் செலுத்துவார் எனக் கேட்கப்பட்டது.

இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரராக நீரஜ் சோப்ரா உள்ளார். இவர் ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

கிரிக்கெட் வீரர்களில் யார் ஈட்டி எறிதல் போட்டியில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது என இவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பும்ரா ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. முழு உடற்தகுதியின் இருந்தால் பும்ராவால் ஈட்டி எறிதல் போட்டியில் சாதிக்க முடியும் என நினைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News