விளையாட்டு
ஒரே நாளில் 3 தேசிய சாதனை படைத்த மீராபாய் சானு
- லக்னோவில் தேசிய பளு தூக்கும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
- கடந்த 3-ம் தொடங்கிய இந்தப் போட்டிகள் வரும் 14-ம் தேதி வரை நடக்கின்றன.
லக்னோ:
உத்தர பிரதேசத்தின் லக்னோவில் தேசிய பளு தூக்கும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி 3-ம் தொடங்கிய இந்தப் போட்டிகள் வரும் 14-ம் தேதி வரை நடைபெறுகின்றன.
இந்நிலையில், மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு தேசிய பளு தூக்குதலில் 3 தேசிய சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார்.
மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவில் மீரா பாய் சானு முதலில் ஸ்நாட்ச் பிரிவில் 86, 89 கிலோ எடையைத் தூக்கினார். 91 கிலோவை தூக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இருந்தும், இந்தப் பிரிவில் 89 கிலோ எடையைத் தூக்கி புதிய தேசிய சாதனையை நிகழ்த்தினார்.
அடுத்ததாக க்ளீன் & ஜெர்க் பிரிவில் 116 கிலோ எடையைத் தூக்கி புதிய தேசிய சாதனையை நிகழ்த்தினார்.
48 கிலோ மகளிருக்கான எடைப் பிரிவில் மொத்தமாக (89 + 116) 205 கிலோ எடையைத் தூக்கி மூன்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.