விளையாட்டு
எல்லா நாளும் பதக்கம் வெல்ல முடியாது- மனு பாக்கர்
- எனது செயல்பாடு நன்றாகவே இருந்தது.
- பதக்கமேடையில் ஏற முடியாமல் போய் விட்டது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்று வரலாறு படைத்த இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், எகிப்தில் நடந்த உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் தோல்வியை தழுவினார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் மனு பாக்கர் பேசுகையில்,
'உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்வதே எனது இலக்காக இருந்தது. எனது செயல்பாடு நன்றாகவே இருந்தது. ஓரளவு நல்ல ஸ்கோர் எடுத்தேன். ஆனாலும் பதக்கமேடையில் ஏற முடியாமல் போய் விட்டது. சக வீராங்கனை இஷா சிங் பதக்கம் வென்றார்.
விளையாட்டில் நீங்கள் ஒவ்வொரு நாளும் பதக்கம் வெல்ல முடியாது. சில சமயம் தோல்விகளும் வரும். என்னை பொறுத்தவரை நான் தான் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதில்லை. இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்க வேண்டும். அதை யார் வென்றாலும் உற்சாகப்படுத்துவேன்' என்றார்.