ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
கோல்ப் பெண்கள் குழு பிரிவின் ரவுண்ட் 3 சுற்றுகளின் முடிவில் இந்திய வீராங்கனை அதிதி அசோக் முதலிடம் பிடித்துள்ளார். நாளை நடைபெறும் 4-வது சுற்றிலும் சிறப்பாக விளையாடினால் பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது.
பிறந்தநாளில் வெள்ளி வென்ற சரப்ஜோத் சிங்
துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் சரப்ஜோத்சிங்- திவ்யா சுப்பராஜூ ஜோடி இன்று வெள்ளி பதக்கத்தை வென்றது. போட்டிக்குப் பிறகு சரப்ஜோத் சிங்கின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. கொண்டாட்டத்தில் சீன வீரர்களும் கலந்து கொண்டனர்.
பெண்களுக்கான ஹப்டலொன் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்வப்ணா பர்மன் 1.7 மீட்டர் தாண்டி 4-வது இடத்தையும், நந்தினி ஆகாசாரா 1.61 மீட்டர் உயரம் தாண்டி 9-வது இடத்தையும் பிடித்தனர்.
குதிரையேற்றம்: அணிகள் பிரிவில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.
கேனோ ஸ்பிரின்ட் பெண்கள் கயக் டபுள் 500 மீட்டர் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனைகளான பினிதா சானு- பார்வதி கீதா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
கேனோ ஸ்பிரின்ட் ஆண்கள் 1000 மீட்டர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் வர்மா அரையிறுதிக்கு முன்னேறினார்.
துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் சரப்ஜோத்சிங்- திவ்யா சுப்பராஜூ வெள்ளி பதக்கத்தை வென்றது.
#TeamIndia duo of Sarabjot Singh & Divya T.S settle for 🥈 in the 10m Air Pistol Mixed Team #Shooting event 🔫
— Sony LIV (@SonyLIV) September 30, 2023
Congratulations to the birthday boy who turns 22 today & the girl from Karnataka for a brilliant show 👏✨#Cheer4India #HangzhouAsianGames #AsianGames2023 #SonyLIV pic.twitter.com/V5zi0XaI80
ஆசிய விளையாட்டு போட்டியில் 8-வது நாளான இன்று காலை 8 மணியளவில் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் சரப்ஜோத்சிங்- திவ்யா சுப்பராஜூ ஜோடி...
நீளம் தாண்டுதல் போட்டியில் ஜெஸ்வின் ஆல்ட்ரின் மற்றும் முரளி ஸ்ரீசங்கர்...
100 மீட்டர் தடை ஓட்டத்தில் ஜோதி யர்ராஜி மற்றும் நித்யா ராம்ராஜ்...
1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜின்சன் ஜான்சன் மற்றும் அஜய் குமார் சரோஜ் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் இறுதி போட்டி நாளை மாலை நடைபெற உள்ளது.
நீளம் தாண்டுதல் போட்டியில் ஜெஸ்வின் ஆல்ட்ரின் 7.67 மீட்டர் தூரம் தாண்டி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.