விளையாட்டு
LIVE

ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

Published On 2023-09-23 06:42 IST   |   Update On 2023-10-07 16:38:00 IST
2023-09-30 02:05 GMT

பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டம் (100m Hurdles) போட்டியில் 13.03 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து இறுதிப்போட்டிக்கு ஜோதி யர்ராஜி முன்னேறினார்.

2023-09-30 02:01 GMT

தடகளம் ஆண்கள் நீளம் தாண்டுதல் தகுதி சுற்று போட்டியில் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் 7.97 மீட்டர் தாண்டி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

2023-09-30 01:49 GMT

துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் சரப்ஜோத்சிங்- திவ்யா சுப்பராஜூ ஜோடி தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளது.

2023-09-30 01:49 GMT

ஆசிய விளையாட்டு போட்டி: ஸ்குவாஷ் போட்டி மற்றும் ஆக்கியில் இந்தியா- பாகிஸ்தான் பலப்பரீட்சை நடத்துகின்றன.

2023-09-30 01:30 GMT

ஆசிய விளையாட்டு போட்டி தொடரின் 8ம் நாளான இன்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

2023-09-29 16:27 GMT

நான்காவது இடத்தில் இந்தியா

ஆசிய விளையாட்டு போட்டியின் ஆறாம் நாள் முடிவில், இந்தியா 33 பதக்கங்களை வென்று நான்காவது இடத்தில் உள்ளது. இதில் 8 தங்கம், 12 வெள்ளி மற்றும் 13 வெண்கல பதக்கங்கள் அடங்கும்.

2023-09-29 15:27 GMT

எட்டு பதக்கங்களை வென்ற இந்தியா

ஆசிய விளையாட்டில் இந்தியா இன்று மட்டும் எட்டு பதக்கங்களை வென்றுள்ளது. இதில் இரண்டு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கல பதக்கங்கள் அடங்கும்.

2023-09-29 14:19 GMT

குண்டு எரிதல்

கிரண் பலியன் வெண்கலம் வென்று அசத்தல். தடகள பிரிவில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது.

2023-09-29 13:41 GMT

நீச்சல் போட்டிகளில் பதக்கம் குவிக்க தவறியது இந்தியா. இன்றுடன் நீச்சல் போட்டிகள் முடிந்ததை அடுத்து இந்திய அணி ஏமாற்றம்.

2023-09-29 13:06 GMT

ஸ்குவாஷ் ஆண்கள்

இந்திய ஆண்கள் அணி இறுதி போட்டிக்கு முன்னேற்றம். மலேசியா அணியை 3-1 என்ற அடிப்படையில் இந்தியா வீழ்த்தியது.

Tags:    

Similar News