விளையாட்டு
LIVE

ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

Published On 2023-09-23 06:42 IST   |   Update On 2023-10-07 16:38:00 IST
2023-09-30 07:04 GMT

குத்துச்சண்டை: பெண்களுக்கான 66-75 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹெய்ன் 5:0 என தென்கொரியா வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

2023-09-30 07:02 GMT

டேபிள் டென்னிஸ்: மகளிர் ஒற்றையர் பிரிவில் 2-4 என்ற கணக்கில் உலகின் 4-ம் நிலை வீராங்கனையான யிடி வாங்-யிடம் மனிகா பத்ரா தோல்வியடைந்தார்.

2023-09-30 06:51 GMT

குதிரையேற்றம்: குதிரையேற்றம் இவெண்டிங் டிரஸ்செஜ் பிரிவின் தனிநபர் சுற்றில் இந்திய வீரர்கள் ஆஷிஷ் விவேக் முதல் இடத்தையும், அபூர்வ கிஷோர் 8ம் இடத்தையும், விகாஷ் குமார் 16ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

அதேவேளை, குதிரையேற்றம் இவெண்டிங் டிரஸ்செஜ் பிரிவின் குழு சுற்றில் இந்தியா 3ம் இடத்தில் உள்ளது. அடுத்த சுற்றான கிராஸ் கண்ட்ரி நாளை நடைபெற உள்ளது.

2023-09-30 06:49 GMT

டென்னிஸ்: கலப்பு இரட்டையர் இறுதி போட்டியில் ரோகன் போபண்ணா - ருதுஜா போசலே ஜோடி 2-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்துள்ளது.

2023-09-30 06:42 GMT

பிரிட்ஜ்: பிரிட்ஜ் ஆண்கள் குழு பிரிவில் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது. பெண்கள் குழு பிரிவில் 7-ம் இடத்திலும், பிரிட்ஜ் கலப்பு பிரிவில் இந்திய அணி 6-ம் இடத்தில் உள்ளது.

2023-09-30 06:37 GMT

கைப்பந்து: பெண்கள் ஏ பிரிவில் வடகொரியாவிடம் 1-3 என வீழ்ந்தது இந்தியா

2023-09-30 06:33 GMT

துப்பாக்கி சுடுதல் டிரப்-75 ஆண்கள் பிரிவில் கைனன் டாரியஸ் சனாய், சோரவர் சிங் சந்து, ப்ரீத்திவிராஜ் தொண்டைமான் 215-X புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

2023-09-30 06:20 GMT

குத்துச்சண்டை: பெண்களுக்கான 50-54 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை ப்ரீத்தி கஜகஜஸ்தான் வீராங்கனையை 4:1 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் பதக்கத்தை உறுதி செய்துள்ளது.

2023-09-30 06:16 GMT

டென்னிஸ் கலப்பு இரட்டையர் இறுதி போட்டியில் தங்கமா? வெள்ளியா? சீன தைபே அணியுடன் விளையாடி வரும் போபண்ணா- போசலே ருதுஜா ஜோடி.

2023-09-30 06:04 GMT

டேபிள் டென்னிஸ்: ஆண்கள் இரட்டையர் காலிறுதி சுற்றில் இந்தியா- தென்கொரியா மோதின. இந்தியாவின் மானுஷ் ஷா, மானவ் தாக்கார் இணை தென்கொரிய வீரர்களை எதிர்கொண்டனர். பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 3-2 என்ற செட் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி தென்கொரியா வெற்றி பெற்றது.

Tags:    

Similar News