விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினார் லக்ஷயா சென்

Published On 2025-11-20 21:57 IST   |   Update On 2025-11-20 21:57:00 IST
  • ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
  • இதில் இந்தியாவின் லக்‌ஷயா சென் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

சிட்னி:

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், தைவானின் சீ யூ ஜென் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-17, 13-21, 21-13 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் அயுஷ் ஷெட்டி 21-17, 21-16 என்ற செட் கணக்கில் ஜப்பானின் கோடாய் நரோகாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News