விளையாட்டு

கடைசி போட்டியில் தோல்வி: WWE-ல் இருந்து ஓய்வு பெற்றார் '90-ஸ் கிட்ஸின் ஹீரோ' ஜான் சீனா

Published On 2025-12-14 09:38 IST   |   Update On 2025-12-14 09:38:00 IST
  • மல்யுத்த போட்டிகள் மட்டுமின்றி பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் ஜான் சீனா நடித்துள்ளார்.
  • தனது கடைசி போட்டியில் கன்தரை எதிர்கொண்ட ஜான் சீனா Tap out முறையில் தோல்வியடைந்தார்.

WWE மல்யுத்த போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்களில் குறிப்பிடத்தக்க ரசிகர்களை கொண்டவர் ஜான்சீனா. இவரின் பெயரை கேட்டாலே, 90-ஸ் கிட்ஸ் மனங்களில் மகிழ்ச்சி ஏற்படும் என்றே கூறலாம். அவர் களத்திற்குள் எண்ட்ரி கொடுக்கும் ஸ்டைல் மிகவும் பிரபலம் ஆகும்.

16 முறை WWE சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜான் சீனா WWE போட்டிகளால் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்தாண்டு அறிவித்தார்.

இந்நிலையில், தனது கடைசி போட்டியில் கன்தரை எதிர்கொண்ட ஜான் சீனா Tap out முறையில் தோல்வியடைந்தார். இதன்மூலம் 90's கிட்ஸின் Hero ஜான் சீனா தோல்வியுடன் WWE மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

மல்யுத்த போட்டிகள் மட்டுமின்றி பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் ஜான் சீனா நடித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஆஸ்கார் விழாவில், சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை அறிவிக்க ஆடை இல்லாமல் ஜான் சீனா மேடை ஏறியது பெரும் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News