விளையாட்டு
உலக குத்துச்சண்டை: இறுதிப்போட்டியில் நூபுர் ஷியோரன்- ஜெய்ஸ்மின் லம்போரியா
- உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 4 பதக்கம் உறுதியானது.
- வீராங்கனைகளே இந்த பதக்கங்களை பெற்றுக் கொடுத்தனர்.
லிவர்பூர்:
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய வீராங்கனை நூபுர் ஷியோரன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். 80-க்கும் மேற்பட்ட எடை பிரிவின் அரைஇறுதியில் அவர் துருக்கி வீராங்கனை ஷெய்மா துஸ்டசை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தினார். ஏற்கனவே 57 கிலோ பிரிவில் ஜாஸ்மின் லம்போரியா இறுதிப்போட்டிக்கு நுழைந்து இருந்தார்.
உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 4 பதக்கம் உறுதியானது. வீராங்கனைகளே இந்த பதக்கங்களை பெற்றுக் கொடுத்தனர்.