விளையாட்டு
சர்வதேச ஸ்குவாஷ் போட்டி: தமிழக வீராங்கனை ஷமீனா ரியாஸ் 'சாம்பியன்'
- சர்வதேச ஸ்குவாஷ் போட்டி அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் நடந்தது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் தமிழக வீராங்கனை ஷமீனா ரியாஸ், சக நாட்டு வீராங்கனை அஞ்சலி செம்வாலை சந்தித்தார்.
கவுகாத்தி:
சர்வதேச ஸ்குவாஷ் போட்டி அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் தமிழக வீராங்கனை ஷமீனா ரியாஸ், சக நாட்டு வீராங்கனை அஞ்சலி செம்வாலை (மராட்டியம்) சந்தித்தார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஷமீனா ரியாஸ் 11-9, 13-11, 9-11, 11-4 என்ற செட் கணக்கில் அஞ்சலியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.