விளையாட்டு

ஆசிய வில்வித்தை போட்டியில் இந்தியா 3 தங்கப்பதக்கம் வென்று அசத்தல்

Published On 2025-11-14 12:38 IST   |   Update On 2025-11-14 12:38:00 IST
  • பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வென்னம் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
  • காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்திய அணி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

டாக்கா:

24-வது ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த காம்பவுண்ட் பெண்கள் அணிகள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஜோதி சுரேகா வென்னம், தீப்ஷிகா, பிரித்திகா பிரதீப் ஆகியோரை கொண்ட இந்திய அணி 236-234 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.

இதன் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வென்னம் 147-145 என்ற புள்ளி கணக்கில் சக நாட்டு வீராங்கனையான 17 வயது பிரித்திகாவை சாய்த்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இதனால் பிரித்திகாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் அபிஷேக் வர்மா- தீப்ஷிகா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 153-151 என்ற புள்ளி கணக்கில் வங்காளதேசத்தை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

Tags:    

Similar News