உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்திய பெண்கள் அசத்திய நிலையில், பதக்கமின்றி திரும்பிய வீரர்கள்..!
- பெண்கள் 4 பிரிவில் பதக்கம் வென்றனர்.
- ஆண்கள் பிரிவில் ஒருவர் கூட பதக்கம் வெல்லவில்லை.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட வீராங்கனைகள் பதக்கம் வென்று அசத்தினர்.
ஜெய்ஸ்மின் லம்போரியா 57 கிலோ எடைப்பிிவில் தங்கம் வென்றார். அதேபோல் 48 கிலோ எடைப்பிரிவில் மீனாட்சி ஹூடா தங்கம் வென்றார். பூஜா ராணி 80 கிலோ எடைப்பிரிவில் வெண்கல பதக்கமும், நுபுர் ஷொரன் 80 கிலோ எடைக்கு மேல் எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
ஜெய்ஸ்மின் பதக்கம் வென்ற பிரிவைத் தவிர்த்து, மற்ற மூன்று வீராங்கனைகள் வெற்றி பெற்ற பிரிவு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இடம்பெறாதைவாகும். இதனால் போட்டிகள் கடுமையாக இல்லை எனக் கூறப்படுகிறது. நுபுர் பிரிவில் 10 வீராங்கனைகள்தான் கலந்து கொண்டனர். 80 கிலோ எடைப்பிரிவில் 12 வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
வீராங்கனைகள் பிரிவுகளிலாவது 4 பதக்கம் கிடைத்தது. ஆண்கள் பிரிவில் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை.
ஜட்டுமணி சிங் (50 கிலோ) அபினாஷ் ஜாம்வால் (65 கிலோ) ஆகியோர் மட்டுமே காலிறுதிக்கு முன்னேறினர். மறற வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர். குறிப்பாக முதல் ரவுண்டிலேயே தோல்வியடைந்தனர்.
உலக குத்துச் சண்டை சங்கம் பிரச்சனை காரணமாக இந்திய வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக்கிற்குப் பிறகு இரண்டு தொடர்களில் மட்டுமே விளையாடியுள்ளனர். வீராங்கனைகள் ஒரேயொரு தொடரில் மட்டும்தான் விளையாடியுள்ளனர்.