விளையாட்டு

வங்காளதேச முன்னாள் கேப்டன் வீட்டுக்கு தீ வைப்பு

Published On 2024-08-06 17:22 IST   |   Update On 2024-08-06 17:22:00 IST
  • வங்காளதேசத்தில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
  • வங்காளதேசத்தில் வன்முறை வெடித்தது.

வங்காளதேசத்தில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஷேக் ஹசீனாவை பதவி விலக வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

வங்காளதேசத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியிலிருந்து விலகி, தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார்.

இந்நிலையில் வங்கதேச முன்னாள் கிரிக்கெட் வீரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மோர்டாசாவின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியான பங்களாதேஷ் அவமி லீக் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வான இவர், கட்சியின் கொறடாவாக செயல்பட்டு வந்துள்ளார். இந்த சூழலில் மோர்டாசாவின் வீட்டுக்குள் சென்ற போராட்டக்காரர்கள் அங்குள்ள பொருட்களை தீ வைத்து கொளுத்தினர். இந்த தீ வைப்பு சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News