உங்களிடத்தில் பொறுப்பு கொடுக்கப்பட்டால்... கேப்டன் கில்லுக்கு யுவராஜ் சிங் பாராட்டு
- அயல்நாட்டில் சுப்மன் கில் எப்படி விளையாடுவார் என பல கேள்விகள் அவர் முன் வைக்கப்பட்டன.
- டெஸ்ட் கேப்டனான கில், இங்கிலாந்தில் 4 சதங்களை விளாசினார்
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்த தொடரை 2-2 என சமன் செய்தது.
இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் தொடர் நாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில், இந்திய டெஸ்ட் கேப்டன் கில்லை முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் பாராட்டியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து பேசிய யுவராஜ் சிங், "இந்திய அணி வீரர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். இது ஒரு இளம் அணி என்பதால், தொடர் சமநிலையில் முடிந்தாலும், இது எங்களுக்குக் கிடைத்த வெற்றி என்று நான் நிச்சயமாக உணர்கிறேன். இங்கிலாந்தில் சென்று நன்றாக விளையாடி உங்களை நிரூபிப்பது எளிதல்ல
அயல்நாட்டில் சுப்மன் கில் எப்படி விளையாடுவார் என பல கேள்விகள் அவர் முன் வைக்கப்பட்டன. ஆனால் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனான கில், இங்கிலாந்தில் 4 சதங்களை விளாசினார். உங்களிடத்தில் பொறுப்பு கொடுக்கப்பட்டால், அதனை எப்படி கையாள வேண்டும் என கில் நிரூபித்து விட்டார்" என்று தெரிவித்தார்.