கிரிக்கெட் (Cricket)
null

மும்பை வேண்டாம்.. கோவா அணியில் சேர ஜெய்ஸ்வால் கோரிக்கை

Published On 2025-04-02 14:49 IST   |   Update On 2025-04-02 15:06:00 IST
  • ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடினார்.
  • தனிப்பட்ட காரணங்களுக்காக மும்பை அணியிலிருந்து விலகுகிறார்.

இந்தியாவில் உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடி வந்தவர். ரஞ்சி தொடரில் மும்பை அணியின் தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் களமிறங்கினார்.

இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக மும்பை அணியில் இருந்து கோவா அணிக்கு மாற்றுவதற்கு மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் NOC (ஆட்சேபனை இல்லை சான்றிதழ்) சான்றிதலை ஜெய்ஸ்வால் கோரியுள்ளார்.

அடுத்த ரஞ்சி சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட ஜெய்ஸ்வால் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் ரசிகர்களிடையே பேசும் பொருளாக மாறியுள்ளது.

Tags:    

Similar News