WTC இறுதிப்போட்டி: டாஸ் வென்று தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சு தேர்வு
- வானம் மேகமூட்டமாக உள்ளதால் நாங்கள் முதலில் பந்து வீசுகிறோம்- பவுமா
- 10 நாள் எங்களை தயார் படுத்தி போட்டிக்கு தயாராக இருக்கிறோம்- கம்மின்ஸ்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. இதில் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் பவுமா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
"வானம் மேகமூட்டமாக உள்ளதால் நாங்கள் முதலில் பந்து வீசுகிறோம். சிறந்த காம்பினேசன் அணியை தேர்வு செய்துள்ளோம். 15 வீரர்களும் நம்பிக்கையாக உள்ளனர். இது மிகப்பெரிய இறுதிப் போட்டி. ரசிகர்களுக்கு சிறந்ததாக இருக்க வேண்டும்" என தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் பவுமா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் "முதலில் பேட்டிங் செய்வது மகிழ்ச்சிதான். மேக மூட்டமாக இருந்தாலம், சிறந்த ஆடுகளம் போன்று தோன்றுகிறது. 10 நாள் எங்களை தயார் படுத்தி போட்டிக்கு தயாராக இருக்கிறோம்" என்றார்.
ஆஸ்திரேலியா அணி வீரர்களின் விவரம் வருமாறு:
உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் , பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி (WK), பேட் கம்மின்ஸ் (C), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜோஷ் ஹேசில்வுட்
தென் ஆப்பிரிக்க அணி வீரர்களின் விவரம் வருமாறு:
மார்கிரம், ரியான் ரிக்கெல்டன், வியான் முல்டர், டெம்பா பவுமா (கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்ஹாம், கைல் வெர்ரின் (விக்கெட்கீப்பர்), மார்கோ யான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி நிகிடி