WPL 2026 அட்டவணை வெளியீடு: தொடக்க ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதல்
- 28 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டி 22 ஆட்டங்களை கொண்டது.
- நவி மும்பையில் உள்ள டி.ஒய். படேல் ஸ்டேடியத்தில் தொடக்க போட்டி நடக்கிறது.
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும் டபிள்யூ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 2023-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
5 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் 2 முறையும் (2023, 2025), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஒரு தடவையும் (2024) சாம்பியன் பட்டம் பெற்றன.
4-வது மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இன்று வெளியிட்டது. அதன்படி இந்தப் போட்டி ஜனவரி 9-ந்தேதி தொடங்கி பிப்ரவரி 5-ந் தேதி வரை நடக்கிறது.
முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி முன்னாள் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர் கொள்கிறது. நவி மும்பையில் உள்ள டி.ஒய். படேல் ஸ்டேடியத்தில் தொடக்க போட்டி நடக்கிறது.
நவிமும்பை, வதோதரா ஆகிய 2 இடங்களில் போட்டி நடக்கிறது. எலிமினேட்டர் மற்றும் இறுதிப்போட்டி வதோதராவில் நடக்கிறது. 28 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டி 22 ஆட்டங்களை கொண்டது.